விவசாய நிலத்தில் விமானதளம் அமைக்க முயற்சி அனுமதியை ரத்து செய்ய கலெக்டரிடம் கோரிக்கை


விவசாய நிலத்தில் விமானதளம் அமைக்க முயற்சி அனுமதியை ரத்து செய்ய கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 23 Dec 2018 2:05 AM IST (Updated: 23 Dec 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலத்தில் விமானதளம் அமைக்கும் அனுமதியை ரத்து செய்ய கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

காரைக்கால், 

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பொன்பேத்தி, செம்பியன்கால், புத்தகுடி, தொண்டமங்கலம் உள்ளிட்ட கிராம மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான சந்திரபிரியங்காவுடன் மாவட்ட கலெக்டர் கேசவனை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

நெடுங்காடு பொன்பேத்தி, செம்பியன்கால், புத்தகுடி, தொண்டமங்கலம் கிராம மக்கள் கடந்த பல ஆண்டு களாக விவசாய தொழில் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விமானதளம் அமைக்க தனியார் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே தனியார் விமான தளத்திற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story