உடுமலை மாரியம்மன் கோவிலில் திருவாதிரை திருமாங்கல்ய நோன்பு 108 தம்பதியர் பங்கேற்பு


உடுமலை மாரியம்மன் கோவிலில் திருவாதிரை திருமாங்கல்ய நோன்பு 108 தம்பதியர் பங்கேற்பு
x
தினத்தந்தி 23 Dec 2018 3:45 AM IST (Updated: 23 Dec 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை மாரியம்மன் கோவிலில் திருவாதிரை திருமாங்கல்ய நோன்பு மற்றும் 108 தம்பதிகள் பூஜை நடந்தது.

உடுமலை,

உடுமலை மாரியம்மன் கோவிலில் நேற்று மாலை மார்கழி மாத திருவாதிரை திருமாங்கல்ய நோன்பு மற்றும் 108 தம்பதிகள் பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் 108 தம்பதிகள் வரிசையாக அமர்ந்திருந்தனர். மங்களஇசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கோ-பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், கலசஆவாகன பூர்வாங்க பூஜைகள், அக்நிகார்யம், ஜெபம், ஹோமம், பாராயணம், நவக்கிரகஹோமம், நட்சத்திர ஹோமம், புருஷ சூக்தஹோமம், ஆயுஷ்ய ஹோமம், அமிர்த மிருத்யுஞ்சய ஹோமம், தன்வந்தரி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், ஜயாதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, திருமாங்கல்ய பூஜை, மங்களாஷ்டகம், திருமாங்கல்யதாரணம், ஆசீர்வாதம், பிரதக்‌ஷிண நமஸ்காரம், தீர்த்த புரோக்சணம், பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், செயல் அலுவலர் சந்திரமதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story