உசிலம்பட்டி அருகே உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய அம்மா பூங்கா திறப்பு
உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை சூழலுடன், உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய அம்மா பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு மலை தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ளது சமத்துவபுரம். இங்கு தாய் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் இயற்கை எழில்மிகு தோற்றத்துடன் அழகிய அம்மா பூங்கா (அம்மா பார்க்) அமைக்கப்பட்டது. தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பூங்கா திறந்து விடப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்காக ஊஞ்சல், செயற்கை நீரூற்று, ஆங்காங்கே அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பூங்காவில் சிறப்பு ஏற்பாடாக உடற்பயிற்சி கூடமும்(ஜிம்) அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பூங்காவில் நடைபயிற்சி செய்வதற்கும் போதிய இடவசதி உள்ளது. உசிலம்பட்டியில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த பூங்கா உசிலம்பட்டி பகுதியில் உள்ள சிறுவர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு விடுமுறை காலங்கள் மற்றும் மாலை நேரங்களில் பொழுது போக்கிற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது என்று உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாலகிருஷ்ணன், பொறியாளர்கள் கண்ணன், வினோத் ஆகியோர் தெரிவித்தனர்.
மேலும் பூங்கா தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வரும் என்றும், பொதுமக்களின் வருகையை பொறுத்து தினந்தோறும் அவர்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story