நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து சரக்கு லாரிகள் தீப்பிடித்து 3 பேர் கருகி சாவு
சாங்கிலி அருகே சாலை விபத்தில் சிக்கிய சரக்கு லாரிகள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள்.
புனே,
சாங்கிலி அருகே சாலை விபத்தில் சிக்கிய சரக்கு லாரிகள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள்.
லாரிகள் மோதல்
சாங்கிலி அருகே விட்டி மயானி மார்க், சிக்கோல் பாட்டா பகுதியில் நேற்று மதியம் 1 மணி அளவில் சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்புறம் பிஸ்கட் நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு சரக்கு லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக 2 லாரிகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இதில் ஒரு லாரியில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு 2 வாகனங்களிலும் தீப்பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மளமளவெண் கொழுந்து விட்டு லாரிகள் முழுவதும் எரிந்தது.
தகவல் அறிந்த தஸ்காவ் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் 2 லாரிகளில் பற்றிய தீயை சுமார் 3 மணி நேரம் போராடி அணைத்தனர்.
3 பேர் பலி
இந்தநிலையில், தீப்பிடித்து எரிந்த லாரிகளில் இருந்து 3 பேர் கரிக்கட்டையாக மீட்கப்பட்டனர். போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பலியான நபர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தீ விபத்தினால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story