3-வது முறையாக டாய் ரெயில் தடம் புரண்டு விபத்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை


3-வது முறையாக டாய் ரெயில் தடம் புரண்டு விபத்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 23 Dec 2018 4:30 AM IST (Updated: 23 Dec 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

டாய் ரெயில் தடம் புரளும் விபத்துகள் தொடர்வதால் அதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மும்பை, 

டாய் ரெயில் தடம் புரளும் விபத்துகள் தொடர்வதால் அதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

தடம் புரண்டு விபத்து

ராய்காட் மாவட்டத்தில் உள்ள மலைவாசஸ்தலமான மாதேரானுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் நேரலில் இருந்து மாதேரானுக்கு மத்திய ரெயில்வே சார்பில் டாய் ரெயில் இயக்கபடு கிறது.

இந்தநிலையில் டாய் ரெயில் ரூ.6 கோடி செலவில் புதுப்பிக்கபட்டது. 2 ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்பட்டன. புதுப்பிக்கப்பட்ட டாய் ரெயில் கடந்த 8-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.

இதையடுத்து அடுத்த நாளே டாய் ரெயில், தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதன் பின்னர் கடந்த வியாழக்கிழமை மாலை மாதேரான் நோக்கி சென்ற டாய் ரெயில் தடம்புரண்டு விபத்துகுள்ளானது. இதில் கடைசி பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

அதிகாரிகள் விசாரணை

இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 10.35 மணியளவில் ஜும்மாபட்டி ரெயில் நிலையம் அருகே டாய் ரெயில் 3-வது முறையாக தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கு காயம் ஏற்படவில்லை.

இவ்வாறு அடுத்தடுத்து நடந்த விபத்துகளால் பயணிகள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். இதையடுத்து ரெயில்வே பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் மாதேரான் சென்று உள்ளனர். அவர்கள் ரெயில் தடம்புரண்டு விபத்து ஏற்படுவதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story