திருவண்ணாமலையில் ரூ.49 லட்சத்தில் நுண் உயிர் உரமாக்கல் மையம் கலெக்டர் திறந்து வைத்தார்


திருவண்ணாமலையில் ரூ.49 லட்சத்தில் நுண் உயிர் உரமாக்கல் மையம் கலெக்டர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 24 Dec 2018 4:15 AM IST (Updated: 23 Dec 2018 8:14 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் ரூ.49 லட்சம் மதிப்பில் நுண் உயிர் உரமாக்கல் மையத்தை கலெக்டர் கந்தசாமி திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை அண்ணா நகரில் நகராட்சி சார்பாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப்பில் புதிதாக நுண் உயிர் உரமாக்கல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதனை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பின்னர் நுண் உயிர் உரமாக்கல் மையத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை போளூர் சாலை அண்ணா நுழைவு வாயில் அருகில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள மேம்படுத்தப்பட்ட நவிரம் சிறுவர் பூங்காவினை கலெக்டர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து சிறுவர் பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள விளையாட்டு சாதனங்களை பார்வையிட்டார். பின்னர் சிறுமிகளுடன் கலெக்டர் விளையாடினார்.

அப்போது உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, நகராட்சி ஆணையாளர் பரிஜாதம் உள்பட நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story