ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வழங்கினார்


ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வழங்கினார்
x
தினத்தந்தி 24 Dec 2018 3:45 AM IST (Updated: 23 Dec 2018 9:46 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பரிசு வழங்கினார்.

ஈரோடு, 

தமிழ்நாடு இறகுபந்து கழகம் மற்றும் ஈரோடு மாவட்ட இறகுபந்து சங்கம் ஆகியவை இணைந்து ஈரோட்டில் மாநில அளவிலான மூத்தோர் இறகுபந்து போட்டியை ஈரோடு நீல்கிரீஸ் இறகுபந்து அகாடமி உள்விளையாட்டு அரங்கில் கடந்த 4 நாட்கள் நடத்தின. இதில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 35 வயதுக்கு மேற்பட்ட இறகுபந்து வீரர்-வீராங்கனைகள் சுமார் 600 பேர் கலந்து கொண்டனர்.

35 வயது, 40 வயது, 45 வயது, 50 வயது, 55 வயது, 60 வயது, 65 வயது, 70 வயது ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் சர்வதேச விதிமுறைகளுடன் இந்த போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் தமிழ்நாடு இறகுபந்து கழகத்தின் தலைவராக இருக்கும் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசும் இந்த போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா விளையாட்டரங்கில் நடந்தது.

விழாவுக்கு ஈரோடு மாவட்ட இறகுபந்து கழக தலைவர் செல்லையன் என்கிற ராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அருணாசலம் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழ்நாடு இறகுபந்து கழக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். அதிக அளவு பரிசுகளை சென்னையை சேர்ந்தவர்கள் தட்டிச்சென்றனர்.

விழாவில் ஈரோடு மாவட்ட இறகுபந்து சங்க செயலாளர் சுரேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை சங்க இணை செயலாளரும், இறகு பந்து பயிற்சியாளருமான கே.செந்தில்வேலன் ஒருங்கிணைத்து நடத்தினார்.

Next Story