கனகதாசர் ஜெயந்தி விழா: தலையில் தேங்காய் உடைத்து குரும்பர் இன மக்கள் நேர்த்திக்கடன்


கனகதாசர் ஜெயந்தி விழா: தலையில் தேங்காய் உடைத்து குரும்பர் இன மக்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 24 Dec 2018 4:30 AM IST (Updated: 24 Dec 2018 12:04 AM IST)
t-max-icont-min-icon

கனகதாசர் ஜெயந்தி விழாவையொட்டி தலையில் தேங்காய் உடைத்து குரும்பர் இன மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கனகதாசர் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதையொட்டி தேன்கனிக்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்து குரும்பர் இனமக்கள் ஊர்வலமாக சென்றனர். இதில் பெண்கள் கும்ப கலசத்துடன் பங்கேற்றனர். ஊர்வலத்தை முன்னிட்டு கனகதாசரை மங்கள வாத்தியங்களுடன், ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

இந்த ஊர்வலம் நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. அதைத் தொடர்ந்து தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரையில் அமர்ந்து கொள்ள அவர்கள் தலை மீது தேங்காய் உடைக்கப்பட்டது.

தொடர்ந்து கனகதாசர் படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் குரும்பர் கலாசார நிகழ்ச்சிகளான பூஜை ஆட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story