நெல்லை ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சையின்போது ஆசிரியை வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்த 6 டாக்டர்கள் மீது வழக்கு

நெல்லை ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சையின்போது ஆசிரியை வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்த 6 டாக்டர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 24 Dec 2018 3:00 AM IST (Updated: 24 Dec 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சையின் போது ஆசிரியை வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்தது தொடர்பாக 6 டாக்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

நெல்லை, 

நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சையின் போது ஆசிரியை வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்தது தொடர்பாக 6 டாக்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஆசிரியை

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரத்தை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மனைவி ஜெனிட்டா தேவ கிருபாவதி (வயது 45). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயிற்று வலி சிகிச்சைக்காக நெல்லை யில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. அதன்பிறகும் அவருக்கு வயிற்று வலி குணமாகவில்லை.

வயிற்றுக்குள் கத்தரிக்கோல்

பின்னர் மீண்டும் சிகிச்சைக் காக அதே ஆஸ்பத்திரியில் அந்த ஆசிரியை சேர்க்கப் பட்டார். அங்கு அவருக்கு தொடர் வயிற்று வலிக்கான காரணம் குறித்து ‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருந்தது தெரியவந்தது. அதாவது முன்பு அறுவை சிகிச்சை செய்தபோது, மறதியாக டாக்டர்கள் அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்து இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றுக்குள் இருந்த கத்தரிக்கோல் அகற்றப் பட்டது.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஜெனிட்டா சார்பில், இதுதொடர்பாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேந்திரகுமார் ரத்தோட்டிடம் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக பாளையங் கோட்டை போலீசார், சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி டாக்டர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story