அரியாங்குப்பத்தில் சிறுமியை கடத்தி கற்பழித்த ரவுடி கைது
அரியாங்குப்பத்தில் சிறுமியை கடத்தி கற்பழித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம்,
அரியாங்குப்பத்தை சேர்ந்த 16-வயதுடைய சிறுமி கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவளை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் சிறுமியின் பெற்றோர் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரில் தங்களது மகளை யாரோ கடத்தி சென்றுவிட்டனர் என குறிப்பிட்டு இருந்தனர். அதன்பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் மாயமான சிறுமியையும் தேடி வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் மாயமான சிறுமி கடத்தப்பட்டிருப்பதும், சிறுமியை கடத்திச் சென்றது ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த அவரது உறவினரான ரமணா (வயது 22) என்பதும் தெரியவந்தது. ரவுடியான இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த சிறுமி தானாகவே வீட்டுக்கு வந்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அரியாங்குப்பம் போலீசாருக்கும், குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்திற்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் அந்த சிறுமியை புதுவையில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இதில் அந்த சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ரவுடி ரமணா மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் ரமணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை தேடிவந்தனர்.
இந்தநிலையில் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆர்.கே.நகர் மாஞ்சாலை காளியம்மன் கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ரமணாவை போலீசார் கைது செய்தனர். மேல் விசாரணை நடந்து வருகிறது.

Related Tags :
Next Story