குழந்தைகளுக்கு தரமான ஆங்கில கல்வி கிடைக்க வேண்டும் முதல்-மந்திரி குமாரசாமி பேச்சு
குழந்தைகளுக்கு தரமான ஆங்கில கல்வி கிடைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
பெங்களூரு,
குழந்தைகளுக்கு தரமான ஆங்கில கல்வி கிடைக்க வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
பட்டமளிப்பு விழா
பெங்களூரு பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி பேசியதாவது:-
நமது பட்டதாரிகளுக்கு அவசியம் உள்ள வாழ்க்கை கலையில் நிபுணத்துவம் மற்றும் வேலை வாய்ப்புக்கு தேவையான பயிற்சி கிைடக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு தரமான ஆங்கில மொழி கல்வி கிடைக்க வேண்டும். இது நான் அறிந்து வைத்துள்ள விஷயம் ஆகும்.
தரமான உயர்கல்வி
கர்நாடகத்தில் தரமான உயர்கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது எனது ஆசை. இந்த நோக்கத்தில் 67 பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் கலந்துரையாடல் நடத்தினேன். உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும்.
உயர்கல்வி நிலையங்கள், தரமான கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் இளைஞர் சக்தியை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அடிப்படை அறிவியல் மற்றும் பி.ஏ. வரலாறு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டு வருகிறது.
பங்களிப்ைப செலுத்த...
இந்த நோக்கத்தில் பாடப்புத்தகங்களில் வேலை வாய்ப்பு பயிற்சி தொடர்பான பாடங்கள் இடம் பெற வேண்டியது அவசியம். இதற்கு எங்கள் அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
பட்டம் பெற்றுவிட்டால் அவ்வளவு தான் கல்வி முடிந்துவிட்டது என்று கருத முடியாது. நீங்கள் வாழ்க்கையில் சாதித்து காட்டி, நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்ைப செலுத்த வேண்டும்.
ரூ.54 ஆயிரம் கோடி
கர்நாடகத்தில் விவசாயிகள், ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் கோடி அளவுக்கு விளைபொருட்களை சாகுபடி செய்கிறார்கள். அதை மார்க்கெட்டுகள் மூலம் நுகர்வோர் ரூ.54 ஆயிரம் கோடி கொடுத்து வாங்குகிறார்கள். இதில் ரூ.12 ஆயிரம் கோடி இடைத்தரகர்களுக்கு செல்கிறது.
இதற்கு கடிவாளம் போட வருகிற பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்படும். கடவுளின் கருணையால் முதல்-மந்திரி ஆகி இருக்கிறேன். பணத்திற்காக ஆட்சி செய்ய மாட்டேன். ஏழைகளின் மேம்பாட்டிற்காக ஆட்சி புரிகிறேன்.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.
Related Tags :
Next Story