மும்பையில், சீரமைப்பு பணியின் போது வீடு இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் சாவு 6 பேர் படுகாயம்


மும்பையில், சீரமைப்பு பணியின் போது வீடு இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் சாவு 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 24 Dec 2018 5:30 AM IST (Updated: 24 Dec 2018 3:35 AM IST)
t-max-icont-min-icon

மும்பை கோரேகாவில் வீடு இடிந்து 3 தொழிலாளர்கள் பலியானார்கள். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

மும்பை, 

மும்பை கோரேகாவில் வீடு இடிந்து 3 தொழிலாளர்கள் பலியானார்கள். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

வீடு இடிந்தது

மும்பை கோரேகாவ் மேற்கு, மோதிலால் நகரில் மகாடா சால் உள்ளது. இங்குள்ள 2 மாடி வீட்டில் நேற்று சீரமைப்பு பணி நடந்தது. இந்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். காலை 9.15 மணியளவில் திடீரென வீடு இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் உதவி கேட்டு அலறினர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், இடிந்த வீட்டிற்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதற்கிடையே தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினரும் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் படுகாயத்துடன் இடிபாடுகளில் சிக்கியிருந்த 9 பேரை மீட்டு சிகிச்சைக்காக சித்தார்த் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

3 பேர் பலி

இதில், ராமு (வயது22), மங்கல் பன்சா (35), முன்னா சேக் (30) ஆகிய 3 பேர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் சினு (35), ஹரி (3), சங்கர் (21), சரோஜா (24), ரமேஷ் (32) உள்பட 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீரமைப்பு பணியின் போது வீடு இடிந்து 3 பேர் பலியான சம்பவம் கோரேகாவ் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story