கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் குவியும் பக்தர்கள் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வேளாங் கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வமதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக விளங்குகிறது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் ஏசு கிறிஸ்து பிறந்தநாளான (டிசம்பர்) 25-ந்தேதி கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தையநாள் நள்ளிரவில் ஏசு பிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அப்போது சிறப்பு பிரார்த்தனை கூட்டம் மற்றும் ஜெப வழிபாடுகள் நடைபெறும். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலத்தை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்தவண்ணம் உள்ளனர்.
அதைத்தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் பேராலய தியான மண்டபம் அருகில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் கோபுரம் வைக்கப்பட்டுள்ளது. நடுத்திட்டு கோவிலுக்கு எதிர்புறம் நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. பேராலயத்தை சுற்றி செடிகளில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு கிறிஸ்தவ மக்கள் சிலுவை பாதையில் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணிக்கு திருப்பலியும், காலை 8 மணிக்கு கூட்டு திருப்பலியும் நடைபெறுகிறது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் வங்கக்கடலில் குளித்து மகிழ்வது வழக்கம். அவ்வாறு குளிக்கும் பக்தர்கள் கடலின் ஆழமான பகுதிகளுக்கு செல்லாமல் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து கடற்கரை பகுதியில் கடலில் குளிப்பவர்கள் ஆழமான பகுதிக்கு செல்லக்கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் வேளாங்கண்ணியில் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story