தஞ்சை பெரியகோவிலில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்தது - பக்தர்கள் அதிர்ச்சி
தஞ்சை பெரியகோவிலில் அம்மன் சன்னதி கோபுர கலசம் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர்,
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலை கட்டி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் மாமன்னன் ராஜராஜ சோழன். இந்த கோவிலின் கட்டிடக்கலை மற்றும் கலையம்சம் காரணமாக அதனை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. உலகில் உள்ள சிவாலயங்களுக்கு மகுடமாக தஞ்சை பெரியகோவில் திகழ்கிறது.
இந்த கோவில் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், முருகர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
பெரியநாயகி அம்மன் சன்னதி கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசம் நேராக இல்லாமல் சாய்ந்து இருந்தது. மேலும் கோபுரத்தில் இருந்த விளக்கும் எரியவில்லை. ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள், 216 அடி உயர விமான கோபுரம், கேரளாந்தகன் கோபுரம், ராஜராஜன் கோபுரங்களை தரிசனம் செய்துவிட்டு, அம்மன் சன்னதி கோபுரத்தை தரிசனம் செய்ய மேலே பார்த்தனர்.
அப்போது கலசம் சாய்ந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர் மழை பெய்து வருவதுடன் அவ்வப்போது காற்றும் வேகமாக வீசுவதால் கலசம் சாய்ந்து இருக்கலாம் என்றும், கோபுர கலசத்தை உடனே சரி செய்வதுடன், கோபுரத்தில் இருந்த விளக்கையும் எரிய செய்ய வேண்டும் எனவும் கோவில் நிர்வாகத்தினரை பக்தர்கள் வலியுறுத்தினர்.
ராஜராஜன் கோபுரம் பராமரிக்கப்படுமா?
பெரியகோவிலில் மராட்டா நுழைவு வாயிலும், அதைத் தொடர்ந்து கேரளாந்தகன் கோபுரமும், அதைத்தொடர்ந்து ராஜராஜன் கோபுரமும் உள்ளன. ராஜராஜசோழன், கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன் போர்தொடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக கேரளாந்தகன் வாயில் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தஞ்சை பெரியகோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஆயத்தமாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் ஒருபகுதியாக கேரளாந்தகன் கோபுரம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. கோபுரத்திற்கு எந்தவித பாதிப்பும் வராத வகையில் ரசாயன கலவைகளை கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது புதுப்பொலிவுடன் அந்த கோபுரம் காட்சி அளிக்கிறது.
ராஜராஜன் கோபுரம் 3 தளங்களை கொண்டுள்ளது. கோபுர வாயிலின் இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் சிலை காணப்படுகின்றன. இந்த துவார பாலகர் சிற்பங்கள் மிக பெரியவையாகும். துவார பாலகர்களின் காலடியில் ஒரு பிரமாண்டமான யானையை, மலைப்பாம்பு விழுங்குவது போல் உள்ளது. கோபுர வாயிலின் கீழ்பகுதியில் இருபுறங்களிலும் இந்திரனுக்கும், நாகராஜனுக்கும் சன்னதிகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் கிழக்கு பக்கத்தில் புராணம் மற்றும் இதிகாச நிகழ்வுகள் சிற்பங்களாக விவரிக்கப்பட்டுள்ளன. இந்த கோபுரத்தில் சில இடங்களில் மழை நீர் வடிந்து, பாசி படிந்து காணப்படுகிறது.
மேலும் பக்கவாட்டில் உள்ள வரலாற்று நிகழ்வுகளுடன் கூடிய கற்களுக்கு இடையே மழைநீர் சென்று கற்களுக்கான இடைவெளி அதிகரித்து கொண்டே செல்கிறது. சில இடங்களில் தற்காலிகமாக சிமெண்டு கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கும் பெரியகோவிலின் கோபுரங்களையும், கட்டிடங்களையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. கோபுரத்தில் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு விரிசல் இருப்பதால் தான் மழைநீர் வடிகிறது. எனவே ராஜராஜன் கோபுரத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.

Related Tags :
Next Story