காங்கிரஸ் மதநல்லிணக்கத்தை பேணிக்காத்து வருகிறது தேசிய செயலாளர் செல்லக்குமார் பேச்சு


காங்கிரஸ் மதநல்லிணக்கத்தை பேணிக்காத்து வருகிறது தேசிய செயலாளர் செல்லக்குமார் பேச்சு
x
தினத்தந்தி 25 Dec 2018 4:00 AM IST (Updated: 24 Dec 2018 10:28 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சி மதநல்லிணக்கத்தை பேணிக்காத்து வருவதாக தேசிய செயலாளர் டாக்டர் செல்லக்குமார் கூறினார்.

திருவட்டார், 

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மார்த்தாண்டம் அருகே சிராயன்குழியில் நடந்தது. மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் குமார், பேரூர் தலைவர் ஜான் தினேஷ், மாநில பேச்சாளர் சுஜின்குமார், ஜஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில தலைவர் அஸ்லம் பாஷா தொடக்கவுரை ஆற்றினார். கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர் செல்லக்குமார், கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறுபான்மை மக்களின் நலன்களை காக்கும் பொறுப்பை காங்கிரஸ் எப்போதும் புறக்கணித்தது இல்லை. அனைத்து ஜாதி மக்களையும் அரவணைத்து செல்வதே நம் நாட்டின் அடிப்படை கலாசாரம்.

நம் நாட்டில் காங்கிரஸ் கட்சி மட்டுமே மதநல்லிணக்கத்தை பேணி காத்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், அய்யாவழி தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளார், லண்டன் மிஷன் சபைகளின் மாநில தலைவர் வில்சன், இம்மானுவேல் கின்சன் பெல் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

நிகழ்ச்சியில், மாநில சிறுபான்மை பிரிவு காங்கிரஸ் ஆலோசகர் அப்துல் வாகித், சிறுபான்மை பிரிவு சட்ட ஆலோசகர் கிங்ஸ்லி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட செயலாளர்கள் அருள்தாஸ், ஜான் இக்னேசியஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், வட்டார தலைவர் ஜெகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story