தொடர் விடுமுறை எதிரொலி: சுற்றுலா பயணிகள் குவிந்தனர் படகு குழாம் திணறியது


தொடர் விடுமுறை எதிரொலி: சுற்றுலா பயணிகள் குவிந்தனர் படகு குழாம் திணறியது
x
தினத்தந்தி 25 Dec 2018 3:30 AM IST (Updated: 24 Dec 2018 11:20 PM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறையையொட்டி புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் படகு குழாம் திணறியது. சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

அரியாங்குப்பம்,

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி கடந்த சனிக்கிழமை முதல் தொடர் விடுமுறை நாட்களாக உள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். இங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தாலும், நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு சென்று படகு சவாரி செய்வது சுற்றுலா பயணிகளின் விருப்பமாகும். படகு குழாமில் நேற்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்துவிட்டனர். இதனால் படகு குழாம் திணறியது.

படகு குழாம் வளாகத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிரம்பி வழிந்தது. இதனால் படகு குழாமையொட்டி உள்ள கிழக்கு கடற்சாலையில் வாகனங்களை நிறுத்தினர். இது புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் பிரதான சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய போக்குவரத்து போலீசாரும் அப்பகுதியில் கிடையாது என்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

Next Story