தென்காசியில் கிராம நிர்வாக அலுவலர்கள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்
தென்காசியில் கிராம நிர்வாக அலுவலர்கள் மனித சங்கிலியாக நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி,
50 சதவீதம் பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரிய மாவட்ட மாறுதல் வேண்டும். கிராம நிர்வாக அலுவலகங்களில் மின் வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து தர வேண்டும். இணையதளத்தில் சான்றிதழ்களை பெற்று கொள்வதற்கான கம்ப்யூட்டர், இணையதள வசதி வேண்டும். பட்டா மாறுதல்களில் கிராம நிர்வாக அலுவலர்களின் ஒப்புதல் பெற்ற பின்பே மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தென்காசி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் முத்து செல்வன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜசேகர், துணை செயலாளர் அருணாசலம், மாவட்ட செய்தி தொடர்பாளர் வசந்தகுமார் மற்றும் அமைப்பு செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story