தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து


தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து
x
தினத்தந்தி 24 Dec 2018 10:45 PM GMT (Updated: 24 Dec 2018 6:01 PM GMT)

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி,

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்களால், தங்களின் தேவதூதர் ஏசுநாதர் பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பாவங்களிலிருந்தும், தீமைகளிலிருந்தும் விலகி, நல்வழியில் பயணம் செய்ய அவர் வகுத்த பாதைதான் கிறிஸ்துவம். நமக்கு தீமை செய்யும் எதிரிகளுக்கும் இரக்கம் காண்பித்து அவர்களை மன்னிக்கும் மாண்பினை உலகிற்கு எடுத்துரைத்தவர் ஏசுநாதர், அவற்றை தன்வாழ்வின் இறுதிவரை கடைபிடித்தார். அத்தகைய உயர்ந்த குணத்தை மனிதர்கள் அடைந்துவிட்டால் உலகம் அமைதிப்பூங்காவாக மாறும் என்பதில் ஐயமில்லை.

கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழும் அனைவரும் ஏழைகள், சேவை இல்லத்தில் உள்ளோர் என அனைத்து தரப்பினருக்கும் தங்களால் இயன்றதை வழங்கி அவர்களும் இந்த இனிய நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த இனிய நாளில் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருணை வடிவாய் திகழும் ஏசுபிரான் அவதரித்த பெருநாளான டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் திருநாளாக அகிலம் முழுவதும் கிறிஸ்தவ பெருமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். தவறு செய்பவர்களை மன்னித்து மனிதநேயத்துடன் மக்கள் வாழ்வதற்கு தனது நன்னெறிகள் மூலம் எல்லோருக்கும் உணர்த்தியவர் ஏசுபிரான். எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டி அரவணைத்து காக்கும் உயரிய பண்பினை மனித சமுதாயத்துக்கு உணர்த்திய ஏசுபிரானை இந்நாளில் போற்றி வணங்குவோம். வேற்றுமை மறந்து, ஒற்றுமையாய் வாழ்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியாய் கொண்டாடுவோம். அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மன்னிப்பு, விட்டுகொடுக்கும் பெருந்தன்மை, நமக்கு பிறர் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கின்றோமோ அதையே பிறருக்கு நாமும் செய்யவேண்டும். கருணை, சகிப்புத்தன்மை உள்ளிட்ட நற்பண்புகளை பின்பற்றி போதித்த ஏசு கிறிஸ்துவின் பிறந்தநாளே கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்திருநாளில் ஏசு உலகிற்கு போதித்த நற்பண்புகளை பின்பற்ற உறுதியேற்போம். அவ்வாறு உறுதியேற்று வாழ்ந்தோமேயானால் கிறிஸ்துமஸ் தினத்தில் மட்டுமின்றி ஆண்டு முழுக்க நிச்சயம் மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்வோம் என்பதில் சிறிதும் மாற்றுக்கருத்து இல்லை. எனவே இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நான் என் இதயப்பூர்வமான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்னை தெரசா போன்ற உயரிய தொண்டாளர்களை தன்னகத்தே கொண்டு நாட்டுக்கும் மாநிலத்திற்கும் கிறிஸ்தவ சகோதரர்கள் ஆற்றிவரும் தொண்டு மகத்தானது. மனிதநேயம் செழிக்கவும், சகோதரத்துவம் வளரவும், அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட்டு நமது புதுச்சேரி மாநிலத்தின் பெருமை காப்போம்.

அன்பினை, சமாதானத்தினை போதித்த கர்த்தர் ஏசு கிறிஸ்துவின் போதனைகளுடன் நம் நாட்டினரின் எண்ணங்கள் ஒத்துப்போவதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளோம். அத்தகைய போதகரின் பிறப்பை இவ்வுலகமே கொண்டாடும் தினத்தில் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு என் அன்பு கலந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்

முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி:-

அன்பு, கருணை மற்றும் சகிப்பு தன்மையின் அடையாளமான ஏசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரிடத்திலும் அன்பு பாராட்டி, கருணையின் வடிவாய் வாழ்ந்த ஏசுபிரான் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை பின்பற்றி சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்று புதுச்சேரி கிறிஸ்தவ பெருமக்களுக்கு எனது உளம்கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன்:- நாட்டின் தன்னலமற்ற கல்வி சேவை செய்யும் கிறிஸ்தவ சமுதாயத்தினர் நடத்தும் அரசு நிதியுதவி பள்ளிகளுக்குக்கூட பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல் சிறுபான்மையின மக்களுக்கு இழைக்கப்படும் ஆளும் காங்கிரஸ் அரசின் சதியை முறியடிப்போம். மக்கள் படும் துயரங்கள் நீங்கவும், அவர்களுக்கு அரசு செய்யும் துரோகங்களை தடுத்திடவும் தலித் கிறிஸ்தவ மக்களுக்கு சமூக, சமுதாய பாதுகாப்பினை வழங்கிடவும் இந்நன்னாளில் அனைவரும் சபதமேற்போம்.

தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ.:- அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் அன்பு பாராட்டி பிறரையும் நேசித்து எல்லா சிறப்பும் பெற்று நலமோடும், வளமோடும் வாழ வேண்டுமென கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் வேல்முருகன்:-
ஏசு பிறப்பை கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்தவர்களுக்கு மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்குமே ஒரு உற்சாகமான பண்டிகையாக உள்ளது. இந்த இனிய நாளில் அன்பு, ஒற்றுமை, சமதர்மம், மனிதநேயம் ஆகியவற்றை பாதுகாத்து ஒருதாய் மக்களாக வாழ உறுதியேற்போம் என்று கூறி புதுவை மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.

Next Story