பெண்ணாடத்தில் உயர் மின் அழுத்தத்தால் வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின - டி.வி.க்களை தெருவில் போட்டு பொதுமக்கள் போராட்டம்


பெண்ணாடத்தில் உயர் மின் அழுத்தத்தால் வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின - டி.வி.க்களை தெருவில் போட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 25 Dec 2018 3:45 AM IST (Updated: 25 Dec 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடத்தில் உயர் மின் அழுத்தத்தால், வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின. இதையடுத்து டி.வி.க்களை தெருவில் போட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்ணாடம்,

பெண்ணாடம் பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நேற்று மதியம் உயர் மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் இருந்த டி.வி., கிரைண்டர் போன்ற மின்சாதன பொருட்கள் திடீரென வெடித்து சிதறின. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்ததால், அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது. உயிர்மின் அழுத்தத்தால், 30 டி.வி.க்கள், 3 கிரைண்டர், ஒரு மிக்சி, சார்ச் போடப்பட்டு இருந்த 5 செல்போன்கள் வெடித்து சேதமானதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து சேதமான டி.வி. உள்ளிட்ட பொருட்களை அந்த பகுதி மக்கள் தெருவில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த பகுதியில் பழமையான மின்மாற்றி உள்ளது. இதன் காரணமாக அடிக்கடி இங்கு உயிர் மின் அழுத்தம் ஏற்பட்டு வருகிறது. எனவே பிரச்சினைக்கு உரிய மின்மாற்றியை மாற்றி தருமாறு பெண்ணாடத்தில் உள்ள மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் இந்த மின்மாற்றியை மாற்றவில்லை என்றால் அடுத்தகட்டமாக மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story