பண்ருட்டி அருகே விவசாயி, விஷம் குடித்து தற்கொலை


பண்ருட்டி அருகே விவசாயி, விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 25 Dec 2018 3:30 AM IST (Updated: 25 Dec 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி, 

பண்ருட்டி அடுத்துள்ள அழகப்ப சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியநாயகம்(வயது 38). விவசாயி. இவரது மனைவி அருள்ஜெயா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பெரியநாயகம் மதுகுடிக்கும் பழக்கம் உடையவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர், அவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்ததாக தெரிகிறது. இதில் மயங்கி விழுந்த, பெரியநாயகத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பெயரிநாயகம் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரியநாயகம் குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story