எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சிவகங்கை,
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி அ.தி.மு.க. சார்பில் சிவகங்கை ராமச்சந்திரனார் பூங்காவில் இருந்து அமைதி ஊர்வலம் நகர் கழக செயலாளர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்திரன், குணசேகரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராஜா, தகவல் தொழில்நுட்ப செயலாளர் கோபி, வக்கீல் பாலா, சசி குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சிவதேவ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத் தலைவர் வக்கீல் ராஜா, நாட்டரசன்கோட்டை பேரூராட்சி செயலாளர் கண்ணப்பன், காளையார்கோவில் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட அமைப்புசார அணி செயலாளர் சிவாஜி, இளைான்குடி நகர கூட்டுறவு வங்கி தலைவர் பாரதிராஜன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நெட்டூர் நாகராஜ், முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பஸ்நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலையை அடைந்தது. அங்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்ட பின்பு, நகர் செயலாளர் ஆனந்தன் தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதேபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் சிவகங்கை ராமச்சந்திரனார் பூங்காவில் இருந்து தொடங்கிய அமைதி ஊர்வலத்திற்கு மாவட்ட செயலாளர் கே.கே.உமாதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட பேரவை செயலாளர் தேர்போகிபாண்டி, மாநில இளைஞர் அணி இணை செயலாளர் இரவசேரி முருகன், வக்கீல் பிரிவு மாநில இணை செயலாளர் அன்பரசன், மாவட்ட துணை செயலாளர் மெப்பலராஜேந்திரன், இளைஞரணி செயலாளர் அண்ணாமலை, பொறியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் மகேஷ், தகவல் பிரிவு மாவட்ட செயலாளர் வினோத், ஒன்றிய செயலாளர் முத்து மந்தகாளை, நகர் செயலாளர் அன்புமணி உள்பட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடியில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஐந்து விளக்கில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் மெய்யப்பன், பேரவை செயலாளர் கோவிந்தன், இளைஞரணி செயலாளர் இயல்தாகூர், மாவட்ட மகளிரணி நிர்வாகி டாக்டர் சித்ரா தேவி உள்பட அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிங்கம்புணரி அ.தி.மு.க. ஒன்றிய, நகரம் சார்பில் சிங்கம்புணரி சீரணி அரங்கம் அருகே மவுன ஊர்வலம் தொடங்கியது. பெரிய கடைவீதி வழியாக பஸ்நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஊர்வலத்திற்கு ஒன்றிய செயலாளர் வாசு தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட பேரவை செயலாளர் திருவாசகம், இளைஞர், இளம்பெண் பாசறை செயலாளர் ஜெயந்தன், மயிலன், குணசேகரன், சேகர், சுவேந்திரன், ஒன்றிய பொருளாளர் காளாப்பூர் தமிழரசு, சசிக்குமார், நல்லையா, மாவட்ட தொழில் துட்ப பிரிவு துணைத் தலைவர் சதீஸ்சீலன், ஏரியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஆபத்தாரணப்பட்டி பிரபு, ஜெயம்கொண்டநிலை ஜெகன் மற்றும் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மானாமதுரையில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் மாரியப்பன் கென்னடி ஏற்பட்டில், அ.ம.மு.க. அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர்கள் வேலுச்சாமி, சரவணன் ஆகியோர் தலைமையில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நகர செயலாளர் கோபால், நிர்வாகிகள் சந்திரசேகர், பாக்கியம், கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story