கள்ளக்காதல் விவகாரத்தால் கொலையா? கொலையாளி வீசிச்சென்ற துண்டு பிரசுரத்தில் பரபரப்பு தகவல்


கள்ளக்காதல் விவகாரத்தால் கொலையா? கொலையாளி வீசிச்சென்ற துண்டு பிரசுரத்தில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 25 Dec 2018 5:00 AM IST (Updated: 25 Dec 2018 4:52 AM IST)
t-max-icont-min-icon

கிளிஜோதிடர் ரமேஷை வெட்டிக்கொலை செய்த மர்ம ஆசாமி சில துண்டு பிரசுரங்களை அங்கு வீசி சென்றார். அதில் பரபரப்பு தகவல்கள் இடம் பெற்றுள்ளது. கொலை நடந்த இடத்தில் கொலையாளி வீசிச்சென்ற துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ள பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

திருப்பூர்,


திருப்பூர் குமரன் பார்க் ரோட்டில் கிளிஜோதிடம் செய்வது என்ன?இவன் திருப்பூர் மங்கலம் பாரதி புதூரை சேர்ந்தவன். பெயர் ஜே.ரமேஷ் என்கிற குமார். இவன் கடந்த 14 வருடங்களுக்கு மேல் பூங்காவுக்கு வெளியில் அமர்ந்து பூங்காவுக்கு வரும் பெண்களையும், காதலர்களையும் கண்ணி வைத்து, தீயசக்தி சாத்தானை வைத்து, பிடித்து பாலியல் தொழில் நடத்தி வருகிறான். இவனுக்கு பின்னால் சில அரசியல்வாதிகள், சில முக்கிய பிரமுகர்கள், சில போலீஸ் அதிகாரிகள், சில நிறுவன முதலாளிகள் மற்றும் அதன் கும்பலை சேர்ந்தவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

எனக்கும் போயம்பாளையம் ராஜாநகரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 9 வருடங்களாக பழக்கம் இருந்து வந்தது. எங்கள் இருவருக்கும் பிறந்த ஒரு மகன் உள்ளான்.

கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 20-ந்தேதி அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் இருந்து அவளை என்னிடம் இருந்து பிரித்து கூட்டிச்சென்று விட்டான். கடந்த 2 வருடம் 7 மாதங்களாக ரமேஷின் பிடியில் அவள் சிக்கிக்கொண்டு தவித்து வருகிறாள். இதனால் அந்த பெண்ணை மீட்டு, கூட்டிச்சென்றவர்களுக்கு பின்னால் இருக்கும் நபர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் முறையான விசாரணை செய்து கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை பாலியல் தொழில் செய்ததை கண்டுபிடித்தது போல இவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

இப்படிக்கு: இவளால் பாதிக்கப்பட்டவன்.

இவ்வாறு அந்த துண்டுபிரசுரத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த துண்டுபிரசுரத்தை கைப்பற்றிய போலீசார், ஜோதிடர் ரமேஷ் கள்ளக்காதல் விவகாரத்தால் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த துண்டு பிரசுரத்தில் கிளிஜோதிடர் ரமேஷ் புகைப்படமும், மற்றொரு பெண்ணின் புகைப்படமும் இடம் பெற்று இருந்தது. 

Next Story