கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிப்பு
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நகர, ஒன்றிய அ.தி.மு.க. மற்றும் அண்ணா தொழிற்சங்கம் சார்பில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, ஓசூர் பழைய கிருஷ்ணகிரி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு, ஓசூர் நகர துணை செயலாளர் கே.மதன், ஓசூர் ஒன்றிய துணை செயலாளர் ஜெயராம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஜே.எம்.சீனிவாசன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் கே.நாராயணன், கூட்டுறவு வங்கி தலைவர் நடராஜன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாலை அணிவிப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் நிர்வாகிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதில், நகர அ.தி.மு.க. பொருளாளர் கே.என்.குமார், அக்ரோ தலைவர் ஹரி பிரசாத், முன்னாள் நகராட்சி தலைவர் நஞ்சுண்டசாமி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் அசோகா, தவமணி மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் மத்திகிரியில், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முத்துராஜ் தலைமையில், கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பர்கூர்
பர்கூர் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் தலைமை தாங்கி எம்.ஜி.ஆரின் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், முன்னாள் எம்.பி. பெருமாள், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மாதையன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தென்னரசு, நகர செயலாளர் துரைஸ் ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாப்பாரப்பட்டி
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அங்குள்ள 3 ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஒன்றிய செயலாளர் வேலுமணி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மதியழகன், நகர செயலாளர் பாபு, நகர அவைத்தலைவர் ராஜி, நகர பொருளாளர் சுகுமார், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைசெயலாளர் முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பனைகுளத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நினைவுதின நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் காசி, வஜ்ஜிரம் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நல்லம்பள்ளி அடுத்த அதியமான்கோட்டையில் அ.ம.மு.க. மாவட்ட இளைஞரணி சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி தலைமையில் நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முனிரத்தினம், காளியப்பன், பிரேம்குமார், முனியன், அங்கப்பன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பாப்பாரப்பட்டி அருகே உள்ள வேலம்பட்டி நெசவாளர் காலனியில் அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் சாம்ராஜ் தலைமையில் ஊராட்சி செயலாளர் கணபதி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி ஒன்றிய செயலாளர் ரஞ்சித், கிளை செயலாளர்கள் ராஜேந்திரன், வடிவேல் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Tags :
Next Story