பெரியார் நினைவு தினம்
பெரியார் நினைவு நாளையொட்டி அவரது உருவச்சிலை மற்றும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காரைக்குடி,
காரைக்குடியில் தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்குள்ள பெரியார் சிலைக்கு தி.க. மண்டல தலைவர் சாமி.திராவிடமணி, மாவட்ட தலைவர் அரங்கசாமி, செயலாளர் வைகறை, தலைமை கழக பேச்சாளர் என்னாரெசு பிராட்லா, நகர தலைவர் ஜெகதீசன், செயலாளர் கலைமணி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயலெட்சுமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இதேபோல அ.தி.மு.க. சார்பில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கல்லல் நாச்சியப்பன், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் தென்னவன், நகர செயலாளர் குணசேகரன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் சன்.சுப்பையா, பழனியப்பன், சொக்கு, தொ.மு.ச.மண்டல தலைவர் மலையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் இளைய கவுதமன், மாவட்ட செயலாளர் சங்கு.உதயகுமார், ஒன்றிய செயலாளர் காக்கூர் தமிழேந்தி ஆகியோரும், காரைக்குடி நகர ம.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் சிற்பி, சேது.தியாகராஜன், மாநில இளைஞர்அணி துணைச் செயலாளர் பசும்பொன் சி.மனோகரன், பொதுக்குழு உருப்பினர் ஆட்டோ பழனி, மாவட்ட வழக்கறிஞர்அணி துணை அமைப்பாளர் முருகானந்தம், நகர துணைச்செயலாளர் வேங்கை மூர்த்தி, கழனிவாசல் சோலை, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கருத்தபக்கீர், பாப்பா ஊருணி இளங்கோ, ரகுராம், லோகு ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இளையான்குடி மேற்கு ஒன்றிய பேரூர் தி.மு.க. சார்பில் பெரியார் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சுப.மதியரசன், பேரூர் செயலாளர் நஜீமுதின், ஒன்றிய துணைச் செயலாளர் மலைமேகு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரபு, பொருளாளர் இப்ராகீம், ஒன்றிய பொறியாளர் அணி மூக்கையா, ஊராட்சி செயலர்கள் சண்முகம், சத்தியேந்திரன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story