செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் விழா: கரூருக்கு மு.க.ஸ்டாலின் நாளை வருகை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
கரூரில் செந்தில்பாலாஜி யின் ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் விழா நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் வருகிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கிறது.
கரூர்,
கரூரின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிலிருந்து விலகினார். பின்னர் அவர் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்து கொண்டார். இது கரூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மத்திய அரசினை வலிமையாக எதிர்க்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் என்றும், அவர் மீது கொண்ட ஈர்ப்பால் தி.மு.க.வில் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் செந்தில்பாலாஜி அறிவித்தார். அதனை தொடர்ந்து கரூர் மாவட்டம் முழுவதும் சென்று தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.
கரூரில் நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் கோவைக்கு இன்று (புதன்கிழமை) இரவு 7.10 மணியளவில் வருகிறார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் கரூருக்கு நாளை (வியாழக்கிழமை)காலை 10 மணிக்கு வந்தடைகிறார். கரூர் கோவை ரோடு அருகே மாவட்ட எல்லையில், செந்தில்பாலாஜி மற்றும் மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க இருக்கின்றனர். அதனை தொடர்ந்து கோவை ரோட்டிலுள்ள ஒரு ஓட்டலில் மு.க. ஸ்டாலின் தங்குகிறார்.
இதைத்தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை ஓட்டலில் இருந்து புறப்பட்டு கரூரில் உள்ள தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளுக்கு சென்று, அவர்களை சந்தித்து ஸ்டாலின் நலம் விசாரிக்கிறார். மதியம் மீண்டும் ஓட்டலுக்கு வந்து தங்கி ஓய்வெடுகிறார். மாலையில் அங்கிருந்து புறப்பட்டு ராயனூரில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு மு.க.ஸ்டாலின் வருகிறார். அப்போது செந்தில்பாலாஜி தலைமையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தாங்கள் தி.மு.க.வில் இணைந்ததற்கான உறுதிமொழி படிவங்களை ஸ்டாலினிடம் அளிக்கின்றனர். பின்னர் விழாவில், தி.மு.க. தொண்டர்கள் முன்னிலையில் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கரூரில் நடக்கிற இந்த இணைப்பு விழா கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வின் பலத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது தெரிவித்தனர்.

இந்த நிலையில் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணையும் விழா நாளை (வியாழக்கிழமை) கரூர் ராயனூர் கலைவாணி நகர் பகுதியில் மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பிரமாண்டமாக விழா மேடை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. ஸ்டாலின் வருகையையொட்டி உற்சாகமடைந்த தி.மு.க.வினர் அவரை வரவேற்கும் விதமாக கரூரின் முக்கிய வீதிகளில் அலங்கார கொடிகள், தோரணம் கட்டி உள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கரூருக்கு வந்து தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்தார். பின்னர் விழா மேடை பணிகளை பார்வையிட்டார்.
கரூரில் நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் கோவைக்கு இன்று (புதன்கிழமை) இரவு 7.10 மணியளவில் வருகிறார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் கரூருக்கு நாளை (வியாழக்கிழமை)காலை 10 மணிக்கு வந்தடைகிறார். கரூர் கோவை ரோடு அருகே மாவட்ட எல்லையில், செந்தில்பாலாஜி மற்றும் மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க இருக்கின்றனர். அதனை தொடர்ந்து கோவை ரோட்டிலுள்ள ஒரு ஓட்டலில் மு.க. ஸ்டாலின் தங்குகிறார்.
இதைத்தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை ஓட்டலில் இருந்து புறப்பட்டு கரூரில் உள்ள தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளுக்கு சென்று, அவர்களை சந்தித்து ஸ்டாலின் நலம் விசாரிக்கிறார். மதியம் மீண்டும் ஓட்டலுக்கு வந்து தங்கி ஓய்வெடுகிறார். மாலையில் அங்கிருந்து புறப்பட்டு ராயனூரில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு மு.க.ஸ்டாலின் வருகிறார். அப்போது செந்தில்பாலாஜி தலைமையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தாங்கள் தி.மு.க.வில் இணைந்ததற்கான உறுதிமொழி படிவங்களை ஸ்டாலினிடம் அளிக்கின்றனர். பின்னர் விழாவில், தி.மு.க. தொண்டர்கள் முன்னிலையில் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கரூரில் நடக்கிற இந்த இணைப்பு விழா கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வின் பலத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது தெரிவித்தனர்.
Related Tags :
Next Story