மாவட்ட செய்திகள்

கொலையாளிகளை சுட்டுத்தள்ள உத்தரவு: மாநில மக்களிடம் குமாரசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் எடியூரப்பா வலியுறுத்தல் + "||" + Kumarasamy apologizes to the people of the state Yeddyurappa Emphasis

கொலையாளிகளை சுட்டுத்தள்ள உத்தரவு: மாநில மக்களிடம் குமாரசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் எடியூரப்பா வலியுறுத்தல்

கொலையாளிகளை சுட்டுத்தள்ள உத்தரவு: மாநில மக்களிடம் குமாரசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் எடியூரப்பா வலியுறுத்தல்
கொலையாளிகளை சுட்டுத்தள்ளுங்கள் என்று உத்தரவிட்ட குமாரசாமி, மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு,

மண்டியா மாவட்டம் மத்தூரில் ஜனதா தளம்(எஸ்) பிரமுகர் பிரகாஷ்(வயது50) என்பவர் நேற்று முன்தினம் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த குமாரசாமி, மண்டியா மாவட்ட போலீஸ் அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு, கொலையாளிகளை சுட்டுத்தள்ளுங்கள் என்று உத்தரவிட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


குமாரசாமியின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெங்களூருவில் ேநற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொலையாளிகளை சுட்டுத்தள்ளுங்கள் என்று முதல்-மந்திரி கூறி இருப்பது, மாநில மக்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டுப்பாடற்ற முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல்-மந்திரி பதவியில் இருப்பவர்கள் இவ்வாறு பேசுவது தவறு. ஆவேசத்தில் அவ்வாறு கூறிவிட்டதாக குமாரசாமி சொல்கிறார்.

முதல்-மந்திரியாக இருப்பவர் ஆவேசபடக்கூடாது. குமாரசாமி தனது பேச்சுக்காக மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். எந்த கட்சியாக இருந்தாலும் சரி, அரசியல் கொலைகளை சகித்துக்கொள்ள முடியாது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சபாநாயகருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது குமாரசாமி தான் - எடியூரப்பா சொல்கிறார்
சட்டசபை சபாநாயகருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது குமாரசாமி தான் என்று எடியூரப்பா கூறினார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜனதா மாநில தலைவருமான எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய விவகாரம் தவறை ஒப்புக்கொண்டார் -எடியூரப்பா
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. மகனிடம் பேரம் பேசிய விவகாரத்தில் தவறை ஒப்புக்கொண்ட எடியூரப்பா அரசியலில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
3. பேரம் பேசிய ஆடியோ விவகாரம்: எடியூரப்பா அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்
பேரம் பேசிய ஆடியோ விவகாரத்தில், எடியூரப்பா அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.
4. மஜத கட்சி எம்.எல்.ஏ-வின் மகனிடம் எடியூரப்பா பேரம் பேசியதாக கூறும் ஆடியோ வெளியீடு: கர்நாடக அரசியலில் பரபரப்பு
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ-வின் மகனிடம் எடியூரப்பா பேரம் பேசியதாக கூறும் ஆடியோ வெளியாகியுள்ளது.
5. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே கூட்டணி அரசு கவிழும் - எடியூரப்பா பரபரப்பு பேச்சு
பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே கூட்டணி அரசு கவிழும் என்று எடியூரப்பா பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...