புதுவை அரசின் டைரி, காலண்டர் வெளியீடு


புதுவை அரசின் டைரி, காலண்டர் வெளியீடு
x
தினத்தந்தி 26 Dec 2018 5:21 AM IST (Updated: 26 Dec 2018 5:21 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில், அரசின் அச்சகத்துறை தயாரித்த 2019-ம் ஆண்டிற்கான அரசு டைரி, காலண்டர் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

புதுச்சேரி,

இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு அரசின் டைரி, காலண்டர் ஆகியவற்றை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘புதுச்சேரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் வான்வழி வண்ணப்படங்களும், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு டைரி மற்றும் காலண்டரில் காந்தி சதுக்கமும், புதுச்சேரி பொலிவுறு நகரம் திட்டம் லோகோ, புதுவை பிராந்திய பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்கள், கோவில், தேவாலயம், பள்ளிவாசல் ஆகிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன’ என்றார்.

விழாவில் அமைச்சர் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., செயலர் பார்த்தீபன், துறை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, இணை இயக்குனர் ராஜசேகர், துணை இயக்குனர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story