வாஜ்பாய் பெயரில் சர்வதேச பள்ளிகள் முதல்-மந்திரி பட்னாவிஸ் தொடங்கி வைத்தார்


வாஜ்பாய் பெயரில் சர்வதேச பள்ளிகள் முதல்-மந்திரி பட்னாவிஸ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 Dec 2018 5:51 AM IST (Updated: 26 Dec 2018 5:51 AM IST)
t-max-icont-min-icon

வாஜ்பாய் பெயரில் சர்வதேச பள்ளிகளை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கி வைத்தார்.

மும்பை,

மராட்டியத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு சார்பில் சர்வதேச பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய மாநில அரசு திட்டமிட்டது. இதில் முதல்கட்டமாக 13 மாவட்ட பஞ்சாயத்து பள்ளிகளுடன் இணைந்து செயல்படும் வகையில் சர்வதேச பாடத்திட்டத்துடன் கூடிய பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த சர்வதேச பள்ளிகளுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி இந்த சர்வதேச பள்ளிகளை நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மனிதவளமேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேக்கர், மாநில கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே, மந்திரி பங்கஜா முண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-

கல்வி உள்பட எல்லா துறைகளிலும் நாம் முன்னேற வாஜ்பாய் கடுமையாக உழைத்தார். இந்தியாவின் புறநகர் பகுதியிலும் சர்வதேச தரத்திலான கல்வி வழங்கப்பட வேண்டும் என அவர் விரும்பினார். நாங்கள் மராட்டியத்தில் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் கல்வியில் 13-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம்.

மராட்டியத்தில் கல்வியில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக தற்போது மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாறுவதை காணமுடிகிறது. இந்த மாற்றத்துக்கு சர்வதேச பாடத்திட்டம் வலுசேர்க்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story