நெல்லை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் பணபரிவர்த்தனை பாதிப்பு
நெல்லை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
வேலை நறுத்தம்
தேனா வங்கி, விஜயா வங்கி மற்றும் பரோடா வங்கி ஆகிய 3 வங்கிகளை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வங்கிகளின் இணைப்பை கண்டித்தும், வராக்கடனை வசூல் செய்ய வலியுறுத்தியும் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்களை சேர்ந்த 9 அமைப்பினர் இணைந்து நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்படி, நெல்லை மாவட்டத்தில் 260 வங்கி கிளைகளை சேர்ந்த ஊழியர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டு கிடந்தன.
ஆர்ப்பாட்டம்
இதுதவிர வங்கி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பெடரல் வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். அதிகாரிகள் கூட்டமைப்பு ஜீவா, வங்கி ஊழியர் கூட்டமைப்பு கில்பர்ட் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகல் ஞானராஜ், செந்தில் ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதையொட்டி வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பணம் போடுதல், எடுத்தல் பணிகளும், காசோலை, டி.டி. மூலம் பண பரிவர்த்தனை பணிகளும் பாதிக்கப்பட்டன. ஒருசில ஏ.டி.எம்.களிலும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
Related Tags :
Next Story