வெள்ளாற்றில் மணல் அள்ளுவது தொடர்பாக மாட்டுவண்டி தொழிலாளர்கள் இடையே மோதல்
வெள்ளாற்றில் மணல் அள்ளுவது தொடர்பாக மாட்டுவண்டி தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் வெள்ளாற்றில் மாட்டுவண்டி மணல் குவாரி செயல்படுகிறது. இந்த மணல் குவாரியில் இருந்து அரியலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மூலம் தினந்தோறும் மணல் எடுத்துச்செல்லப்படுகின்றது. இந்த மணல் குவாரியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாட்டு வண்டிகள் ஏராளமாக வருவதால் உள்ளூர் மாட்டு வண்டிகள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வெளிமாவட்டத்தினரை விரட்டி அடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாட்டு வண்டி தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும் மணல் குவாரியில் இருந்து மாட்டு வண்டிகள் செல்வதற்கான பாதையை பொதுப்பணித்துறை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2 மாவட்ட மாட்டு தொழிலாளர்களின் இந்த மோதலால் வெள்ளாற்றில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story