ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா திரளான பெண்கள் தரிசனம்


ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா திரளான பெண்கள் தரிசனம்
x
தினத்தந்தி 27 Dec 2018 4:30 AM IST (Updated: 27 Dec 2018 5:44 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் நடந்த பொங்கல் விழாவில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

ஈரோடு, 

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் பக்தர்கள் கோவிலுக்கு அலகு குத்தி வந்தும், அக்னி சட்டி ஏந்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடந்தது.

இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தனர். பின்னர் பெண் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் மாவிளக்கு பூஜையும் நடந்தது. இதில் பெண்கள் பலர் வீடுகளில் இருந்து மாவிளக்குகளை கோவிலுக்கு எடுத்து சென்று பூஜை செய்தனர்.

இதேபோல் ஈரோடு காவிரிரோடு மாரியம்மன் கோவில், பெரியவலசு மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

அங்கும் பெண்கள் பொங்கலிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை தரிசனம் செய்தனர். மேலும், வீரப்பன்சத்திரம் தெப்பக்குளத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக காவிரிரோடு மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

மாரியம்மன் கோவில்களில் இன்று (வியாழக்கிழமை) இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மலர் பல்லக்கில் அம்மனின் திருவீதிஉலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) மாலை நடக்கும் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Next Story