மாவட்ட செய்திகள்

சேலம் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Salem Taluk office was previously demonstrated by the Village Administrative Officers

சேலம் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,

கணினி, இணையதள வசதி வேண்டும், கிராம நிர்வாக அலுவலகங்களில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று 17-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள டவுன் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் வட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் சேகர் உள்பட ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், இணையதள வசதி வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களின் அதிகாரத்தை பறிக்கக்கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல், சேலம் மேற்கு மற்றும் தெற்கு தாலுகா அலுவலகங்கள் முன்பு நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சாமி சிலை முன்பு கவர்ச்சி ‘போஸ்’ - நடிகை யாஷிகாவுக்கு எதிர்ப்பு
சாமி சிலை முன்பு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை யாஷிகா ஆனந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
2. சேலத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வருகை: 7-ந் தேதி மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்துக்கு நாளை (புதன்கிழமை) வருகிறார். சேலத்தில் ஏ.வி.ஆர். ரவுண்டானா-அஸ்தம்பட்டி மேம்பாலத்தை 7-ந் தேதி திறந்து வைக்கிறார்.
3. சேலம் செவ்வாய்பேட்டையில் மேம்பால பணிக்காக 22 கடைகள் இடித்து அகற்றம்
சேலம் செவ்வாய்பேட்டையில் மேம்பால பணிக்காக 22 கடைகள் இடித்து அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
4. சேலத்தில் முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை - வாலிபர் கைது
சேலத்தில் முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. சேலத்தில் 16 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து - வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை
சேலத்தில் 16 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்றுகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...