கொட்டாம்பட்டி அருகே கல்லூரி மாணவி தற்கொலை


கொட்டாம்பட்டி அருகே கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 27 Dec 2018 3:45 AM IST (Updated: 27 Dec 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

கொட்டாம்பட்டி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கொட்டாம்பட்டி, 

கொட்டாம்பட்டி அருகே உள்ள மணப்பச்சேரி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிருஷ்ணபெருமாள் (வயது 25). இவருக்கும், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த வேங்கைபட்டியை சேர்ந்த மோகன் மகள் சாலினி (20) என்பவருக்கும் ஓராண்டிற்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது கிருஷ்ணபெருமாள் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சாலினி, அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாலினி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது தந்தை மோகன், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சாலினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தகவல் அறிந்த வந்த சாலினியின் உறவினர்கள், அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி ஆஸ்பத்திரி முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் சப்-கலெக்டர் ஆஷா அஜீத் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். 

Next Story