கோவில் அருகே நிறுவிய சிலுவையை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்: போலீசார் குவிப்பு-வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு
விநாயகர் கோவில் அருகே உள்ள இடத்தில் சிலுவையை நிறுவியதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்,
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ப.முத்தம்பட்டியை சேர்ந்தவர் முருகன். முன்னாள் ஊராட்சி தலைவரான இவருக்கு சொந்தமான நிலம் அதே ஊரில் உள்ளது. இதே பகுதியில் விநாயகர் கோவில், அதற்கு சொந்தமான குளம் மற்றும் நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த பகுதியில் சிலுவை ஒன்றை முருகன் நிறுவியுள்ளார். சிலுவை வைக்கப்பட்ட இடம் விநாயகர் கோவிலுக்கு சொந்தமானது என்றும் எனவே சிலுவையை உடனே அகற்ற வேண்டும் எனவும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியுள்ளனர்.
ஆனால் சிலுவையை அகற்ற அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஊர்கவுண்டர் ஆனந்தகுமார், நாட்டாண்மை தாமோதரன் தலைமையில் நேற்று காலை திருப்பத்தூர்-பொம்மிகுப்பம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக கிராமங்களுக்கு செல்லும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த திருப்பத்தூர் போலீசார், இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது “விநாயகர் கோவில் இடத்தில் சிலுவை வைத்ததை ஏற்க முடியாது, எனவே உடனடியாக அகற்ற வேண்டும்” என கூறினர்.
ஆனால் இது வருவாய்த்துறை சம்பந்தமான பிரச்சினை என்பதால் சிலுவையை அகற்ற தங்களுக்கு அதிகாரம் இல்லை என கூறினர். இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் கூறுகையில், “சிலுவை உள்ள இடம் யாருக்கு சொந்தமானது என்பதை அளவீடு செய்து முடிவு செய்து கொள்ளலாம்” என்றார்.
அப்போது தாசில்தார் சத்தியமூர்த்தி மற்றும் அலுவலர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மறியல் போராட்ட பிரச்சினை குறித்து கேட்டறிந்து சிலுவை உள்ள இடத்தை பார்த்தனர். பின்னர் தாசில்தார் கூறுகையில், “நாளை (அதாவது இன்று) பிரச்சினைக்குரிய இடத்தை சர்வேயர் மூலம் ஆய்வு செய்து சிலுவை உள்ள இடம் கோவிலுக்கு சொந்தமானதா? அல்லது பட்டா நிலமா? என்பது கண்டறியப்படும். பட்டா நிலமாக இருந்தால் அதில் ஒன்றும் தலையிட முடியாது. கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்தால் அகற்றப்படும்” என்றார்.
அதற்குள் மற்றொரு சமூகத்தினரும் அங்கு திரள தொடங்கினர். மறியலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்களும் அங்கு வந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதால் ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
அதன்பின்னர் போலீசார் கூறுகையில், “நிலத்தை அளவீடு செய்ய தாசில்தார் உறுதியளித்துள்ளார். எனவே போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள். உங்கள் மறியலால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக கலைந்து செல்லாவிடில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். அப்போது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் சமரசத்தையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பிரச்சினைக்குரிய இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story