கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு: 5 ஆயிரம் பேருக்கு ரூ.15 கோடியில் கடனுதவிகள் வழங்கும் விழா - அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு
5 ஆயிரம் பேருக்கு ரூ.15 கோடி மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.
ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டத்தில் 32 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து 5 ஆயிரம் பேருக்கு ரூ.15 கோடி மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.
திருவண்ணாமலை மண்டலத்தில் 32 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்க புதிய கட்டிடங்கள், தானிய சேமிப்பு கிடங்குகள், சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 2 புதிய கிளைகள் ஆகியவற்றின் திறப்பு விழா ஆரணி தனபால் திருமண மண்டபத்தில் நடந்தது.
விழாவுக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ரா.பழனிச்சாமி, தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் பா.ரேணுகாம்பாள் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு 32 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடங்களின் கல்வெட்டுகளை திறந்து வைத்தார். அப்போது 5 ஆயிரத்து 93 நபர்களுக்கு ரூ. 15 கோடியே 13 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வகையான கடனுதவிகள் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக மகளிர்களுக்கு கடனுதவிகள் வழங்குவதிலும், திரும்ப பெறுவதிலும் மாநிலத்திலேயே திருவண்ணாமலை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான் மகளிர்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டினார். அந்த சேவைகளை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.
கூட்டுறவு சங்க தேர்தலை கடந்த 2008-ல் மு.க.ஸ்டாலின்தான் நிறுத்தினார். அதன் பிறகு 2013-ல் முறையாக 22 ஆயிரத்து 555 சங்கங்களுக்கும் தேர்தல் நடத்தி 2 லட்சத்து 20 ஆயிரம் உறுப்பினர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூட 2 கட்ட கூட்டுறவு சங்க தேர்தல்கள் முடிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாங்கள் முறையாக மத்திய அரசிடம் தெரிவித்து கரும்பு விவசாயிகளுக்கு கடந்த ஆண்டுகூட பயிர் காப்பீடு திட்டங்கள் பெற்று தந்துள்ளோம். அரிசியை அரசு விலைக்கு வாங்கி 1 கோடியே 93 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்குகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, ஆரணி - சேவூரில் உள்ள ஆரணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தையும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ ரிப்பன் வெட்டி திறந்து வைத்து கடனுதவிகள் வழங்கினார்.
நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அமுதாஅருணாசலம், துணைப்பதிவாளர்கள் ஜெ.சரவணன், ஆர்.பிரேம், கோ.யோகவிஷ்ணு, வேலூர் ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் வக்கீல் கே.சங்கர், பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, சேவூர் ஜெ.சம்பத், எஸ்.ஜோதிலிங்கம், பாலச்சந்தர், திருமால், பி.ஜி.பாபு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் கூட்டுறவாளர்கள், அரசு அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள் சிவசக்தி, பிச்சம்மாள், ஜெகதீசன் மற்றும் பணியாளர்கள், மகளிர் குழுக்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு இணைப்பதிவாளர் வே.நந்தகுமார் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story