கலெக்டர் அலுவலகத்தில் சித்த மருத்துவ முகாம் அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்


கலெக்டர் அலுவலகத்தில் சித்த மருத்துவ முகாம் அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 27 Dec 2018 3:45 AM IST (Updated: 27 Dec 2018 5:47 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சித்த மருத்துவ முகாமை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை, 

பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான அகத்தியரின் பிறந்த தினத்தை சித்த மருத்துவ துறையினர் தேசிய சித்தா தினமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி மாவட்ட சித்த மருத்துவத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கண்காட்சி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். முகாமை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

பழங்காலத்தில் சித்த மருத்துவம் தான் மிக உயரிய மருத்துவமாக இருந்தது. காலப்போக்கில் நாம் அதை மறந்து ஆங்கில மருத்துவத்திற்கு மாறி விட்டோம். ஆங்கில மருத்துவத்தில் நோய்க்கு நிரந்த தீர்வு என்பது கிடையாது. தொடர்ந்து மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும் ஆனால் சித்த மருத்துவத்தில் நோய் குணமாகி விட்டால் மருந்து சாப்பிட வேண்டியதில்லை. சித்த மருத்துவம் நமது சித்தர்களால் உருவானது.

இது சாதாரண மக்களுக்கு மிகவும் பயனுள்ள மருத்துவம். நாம் மறந்துவிட்ட நமது பழைய பழக்க வழக்கங்களை மீண்டும் நினைவு படுத்ததான் இது போன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றன. எனவே அனைவரும் இதை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சப்-கலெக்டர் ஆஷாஅஜீத், மாவட்ட வருவாய் அதிகாரி லதா, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் விஜயன் மதமடக்கி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதமணி, மாவட்ட சித்தா அதிகாரி பிரபாகரன், சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி, தாசில்தார் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story