ஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் மண் அள்ளிய லாரிகள் சிறைபிடிப்பு


ஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் மண் அள்ளிய லாரிகள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 28 Dec 2018 3:30 AM IST (Updated: 27 Dec 2018 6:00 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் மண் அள்ளிய லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் மண் அள்ளிய லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

லாரிகள் சிறைபிடிப்பு

ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் நிறுவனம் சார்பில் காற்றாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு சாலை அமைப்பதற்காக ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு ஆரைகுளம் கிராமத்தின் கிழக்கு பகுதியில் உள்ள குளத்தில் மண் அள்ளப்படுவதாக அந்த பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கு குளத்தில் இருந்து 2 லாரிகளில் ஒரு பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், அந்த 2 லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர்.

பேச்சுவார்த்தை

இதனை அறிந்த ஓட்டப்பிடாரம் தாசில்தார் காளிராஜ், மண்டல துணை தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் நடத்திய விசாரணையில், உரிய அனுமதி இல்லாமல் குளத்தின் கரையை சேதப்படுத்தி மண் அள்ளியது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த 2 லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து பசுவந்தனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story