தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Dec 2018 3:30 AM IST (Updated: 27 Dec 2018 6:57 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி 

கிராம நிர்வாக அலுவலகங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கணினிவழி சான்றுகள் வழங்குவதற்கு நவீன கணினிகள், இணையதள இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கடந்த 10–ந்தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நேற்று 18–வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க வட்டார தலைவர் அமர்ராஜ், செயலாளர் மந்திரசூடாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் 

திருச்செந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட துணை செயலாளர் செல்வலிங்கம், வட்டார தலைவர் வைரமுத்து, செயலாளர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டார தலைவர் நெல்லையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். எட்டயபுரம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க வட்டார துணை தலைவர் ஜெயராஜ், செயலாளர் ராமராஜ், பொருளாளர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story