தூத்துக்குடியில் ‘கனா’ திரைப்பட நடிகர்–நடிகை ரசிகர்களுடன் சந்திப்பு
தூத்துக்குடியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் ‘கனா’ திரைப்படம் திரையிடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் ‘கனா’ திரைப்படம் திரையிடப்பட்டு உள்ளது.
இந்த படத்தின் கதாநாயகன் தர்ஷன், கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் ஆகியோர் நேற்று அந்த தியேட்டருக்கு வந்தனர். அங்கு சிறிது நேரம் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். பின்னர் ரசிகர்களை சந்தித்து பேசினர்.
கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, ‘நான் 4 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்து உள்ளேன். தூத்துக்குடி என்றாலே மக்ரூன்தான் ஞாபகம் வரும். இந்த படத்தை பார்த்து ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் ‘வடசென்னை–2’, ‘துருவநட்சத்திரம்’ ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறேன்’ என்றார்.
Related Tags :
Next Story