ஓசூர் ஒன்றியத்தில் ரூ.5 கோடியில் திட்டப்பணிகள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்


ஓசூர் ஒன்றியத்தில் ரூ.5 கோடியில் திட்டப்பணிகள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 27 Dec 2018 11:00 PM GMT (Updated: 27 Dec 2018 4:04 PM GMT)

ஓசூர் ஒன்றியத்தில் ரூ.5 கோடியில் திட்டப்பணிகளை அமைச்சர் பால கிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், தார் சாலைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் என மொத்தம் ரூ.5 கோடியே 5 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்.

அதன்படி ஓசூர் ஊராட்சி ஒன்றியத்திற்்குட்பட்ட பாகலூர், ஜீமங்கலம், பெலத்தூர், அலசப்பள்ளி, படுதேபள்ளி, குடிசெட்லு உள்ளிட்ட பகுதிகளில் தார் சாலைகள் அமைக்கும் பணி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் ஆகியவற்றை தொடங்கி வைத்து அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய பகுதியில் உள்ள 26 ஊராட்சிகளில் இதுவரை 20 கிராம ஊராட்சிகளில் தலா ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 26 ஊராட்சிகளில் உள்ள 277 சாலைகளில் இதுவரை 67 சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கிராம சாலைகள் அனைத்தும் விரைவில் தார் சாலைகளாக மாற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சிகளில், ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்னகிருஷ்ணன், விமல்ரவிக்குமார், தாசில்தார் முத்துப்பாண்டி, துணை தாசில்தார் பாலாஜி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், கூட்டுறவு சங்க தலைவர்கள் பிரபாகர் ரெட்டி, ஜெயராம், ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளர் முனிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story