அந்தியூர் பகுதியில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரம்


அந்தியூர் பகுதியில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 28 Dec 2018 3:45 AM IST (Updated: 27 Dec 2018 11:02 PM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் பகுதியில் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்தியூர், 


அந்தியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள புதுப்பாளையம், வேம்பத்தி, ஒலகடம், வெள்ளித்திருப்பூர் பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்காக பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் இரவு-பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்தியூரில் மண்பானை தயாரிக்கும் தொழிலாளி கிருஷ்ணனிடம் இதுபற்றி கேட்டபோது, ‘பொங்கல் பானைகள் செய்வதில் மும்முரமாக உள்ளோம். சிறிய பானை ரூ.50-க்கும், பெரிய பானை ரூ.250-க்கும் விற்கிறோம். கோவில்களுக்கு பக்தர்கள் வாங்கிச்செல்லும் அக்னிசட்டி ஒன்று ரூ.50 முதல் ரூ.150 வரை விற்கிறது.


ஈரோடு, கவுந்தப்பாடி, பள்ளியபாளையம், சத்தியமங்கலம், கோபி பர்கூர், கர்நாடகா எல்லைப்பகுதியில் உள்ள மதேஷ்வரன் மலை, ராமபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாக பானைகளை வாங்கிச் செல்கிறார்கள். பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் பொதுமக்களும் தனித்தனியாக வந்து வாங்குவார்கள்‘ என்றார்.

Next Story