போலீசார் பற்றாக்குறையால் கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனை


போலீசார் பற்றாக்குறையால் கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனை
x
தினத்தந்தி 28 Dec 2018 3:45 AM IST (Updated: 27 Dec 2018 11:12 PM IST)
t-max-icont-min-icon

போலீசார் பற்றாக்குறையால் கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனை மீண்டும் தலைதூக்கியுள்ளது.

கம்பம், 

தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்யும் கூடாரமாக கம்பம் திகழ்கிறது. இங்கு ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர அண்டை மாநிலமான கேரளாவுக்கும் கடத்தப்படுகிறது. எனவே கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தனிப்படை அமைத்தார். அந்த தனிப்படையினர் பழைய குற்றவாளிகள் மூலம் கிடைக் கக் கூடிய தகவல்களை சேகரித்து கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தல்காரர் களை கைது செய்து வந்தனர். இதன்மூலம் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையே உள்ளூர் போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீஸ்காரர்களை வெளி மாவட்டங்களுக்கு பணிக்காக அனுப்பி வைக் கின்றனர். இதுதவிர சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளுக்கும் போலீசாரை அனுப்புகின்றனர். போலீசார் பற்றாக்குறை காரணமாக கஞ்சா விற்பனை தடுக்கும் தனிப்படை கலைக் கப்பட்டது.

எனவே கம்பம் பகுதிகளில் மீண்டும் கஞ்சா விற்பனை தலைதூக்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பம் மெட்டு சோதனைச்சாவடியில் கேரளாவை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர் களை கேரள சுங்கத் துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் கம்பத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததாக தெரிவித்தனர். எனவே கம்பம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதை கட்டுப்படுத்த மீண்டும் தனிப்படை அமைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story