சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,015-க்கு விற்பனை
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,015-க்கு விற்பனை ஆனது.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கம் (பூ மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த மார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம், சிக்கரசம்பாளையம், ராஜன் நகர், புதுபீர்கடவு, கொத்தமங்கலம், பவானிசாகர், பெரியகுளம், அரியப்பம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,015-க்கும், முல்லை ரூ.700-க்கும், காக்கடா ரூ.450-க்கும், செண்டுமல்லி ரூ.31-க்கும், பட்டுப்பூ ரூ.80-க்கும் ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும் விற்பனை ஆனது.
நேற்று முன்தினம் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.665-க்கும், முல்லை ரூ.500-க்கும், காக்கடா ரூ.350-க்கும், செண்டுமல்லி ரூ.23-க்கும், பட்டுப்பூ ரூ.70-க்கும், ஜாதிமல்லி ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும் ஏலம் போனது. நேற்று முன்தினத்தைவிட நேற்று மல்லிகைப்பூ கிலோ ரூ.350-ம், முல்லை ரூ.200-ம், காக்கடா ரூ.100-ம் பட்டுப்பூ ரூ.10-ம், ஜாதிமல்லி ரூ.100-ம், சம்பங்கி ரூ.10-ம் உயர்ந்து விற்பனை ஆனது. பூக்கள் விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சத்தியமங்கலம், ஈரோடு, கோபி, கோவை, திருப்பூர் மற்றும் கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து போட்டி போட்டு பூக்களை ஏலம் எடுத்து சென்றனர்.
Related Tags :
Next Story