வண்டலூர் பூங்காவில் நீலமான், ஓநாய் குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்டது


வண்டலூர் பூங்காவில் நீலமான், ஓநாய் குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்டது
x
தினத்தந்தி 27 Dec 2018 10:45 PM GMT (Updated: 27 Dec 2018 6:35 PM GMT)

சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் நீலமான், ஓநாய் குட்டிகள் பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்டது.

வண்டலூர்,

வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் உள்ள ஒரு இந்திய ஓநாய் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் 7 குட்டிகளை ஈன்றது. அதில் 6 ஆண் மற்றும் 1 பெண் ஆகும். அவை மருத்துவ மேற்பார்வைக்கு உட்படுத்தப்பட்டு தற்போது நல்ல நிலைக்கு வந்துள்ளது. தாயுடன் சேர்த்து குட்டி ஓநாய்கள் அதற்குரிய இருப்பிடத்தில் பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. பூங்காவில் தற்போது 13 இந்திய ஓநாய்கள் உள்ளது.

மேலும் சமீபத்தில் பூங்காவில் உள்ள 2 பெண் நீலமான் தலா 2 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த குட்டிகளும் பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. தற்போது பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறையையொட்டி பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பார்வையாளர்களுக்காக பூங்கா நிர்வாகம் சார்பில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story