செல்போனில் எடுத்த ஆபாச படத்தை காட்டி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அடகு கடைக்காரர் கைது


செல்போனில் எடுத்த ஆபாச படத்தை காட்டி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அடகு கடைக்காரர் கைது
x
தினத்தந்தி 28 Dec 2018 4:00 AM IST (Updated: 28 Dec 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

செல்போனில் எடுத்த ஆபாச படத்தை காட்டி மிரட்டி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அடகுகடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் லலித்சவுத்ரி (வயது 23). அடகு கடை வைத்து உள்ளார். இவரது அடகுகடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நகையை அடகு வைக்க வந்தார். அப்போது அந்த பெண்ணுடன் லலித்சவுத்ரிக்கு பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மலர்ந்தது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசத்தை பகிர்ந்து கொண்டனர். இந்த விஷயம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. இதை அவர் கண்டித்தார். இதனால் லலித்சவுத்ரியுடன் உள்ள உறவை அந்த இளம்பெண் துண்டித்து கொண்டார்.

ஆனால் லலித்சவுத்ரி அந்த இளம்பெண்ணை விடவில்லை. இருவரும் நெருக்கமாக இருந்த ஆபாச படக்காட்சிளை தனது செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தார். அந்த படங்களை காட்டி, அவற்றை இணைய தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும், அவ்வாறு வெளியிடாமல் இருக்க தனக்கு தொடர்ந்து உல்லாச விருந்து படைக்க வேண்டும் என்று மிரட்டினார்.

லலித்சவுத்ரியின் இந்த பாலியல் தொல்லை தாங்காமல் அவதிப்பட்டு வந்த குறிப்பிட்ட இளம்பெண், மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். லலித்சவுத்ரி நேற்று கைது செய்யப்பட்டார்.

Next Story