புத்தாண்டையொட்டி சிறப்பு மின்சார ரெயில்கள் : மத்திய, மேற்கு ரெயில்வே அறிவிப்பு


புத்தாண்டையொட்டி சிறப்பு மின்சார ரெயில்கள் : மத்திய, மேற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Dec 2018 5:05 AM IST (Updated: 28 Dec 2018 5:05 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் புத்தாண்டையொட்டி சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

மும்பை,

மும்பையில் புத்தாண்டையொட்டி பயணிகளின் வசதிக்காக சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கபட உள்ளது. இதில் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் சர்ச்கேட் மற்றும் விரார் இடையே 8 சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதில் சர்ச்கேட் ரெயில் நிலையத்தில் இருந்து விராருக்கு முதல் மின்சார ரெயில் 1-ந் தேதி அதிகாலை 1.15 மணிக்கு புறப்படும். சர்ச்கேட்டில் இருந்து விராருக்கு கடைசி மின்சார ரெயில் அதிகாலை 3.25 மணிக்கு புறப்படும்.

இதேபோல் மத்திய ரெயில்வே வழித்தடத்தில் 2 சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இதில் சி.எஸ்.எம்.டி. யில் இருந்து கல்யாணிற்கு 1-ந் தேதி அதிகாலை 1.30 மணிக்கு மின்சார ரெயில் புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு கல்யாண் சென்றடையும். இதேபோல் கல்யாணில் இருந்து அதிகாலை 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அதிகாலை 3.00 மணிக்கு சி.எஸ்.எம்.டி.க்கு வந்து சேரும்.

துறைமுக வழித்தடத்தில் 2 ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இதில் சி.எஸ்.எம்.டி- பன்வெல் இடையே 1-ந் தேதி அதிகாலை 1.30 மணிக்கும், பன்வெல்- சி.எஸ்.எம்.டி. இடையே அதிகாலை 1.30 மணிக்கும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கபட உள்ளது. இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Next Story