2018–19–ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.545.21 கோடி ஒதுக்கீடு அமைச்சர் சரோஜா தகவல்


2018–19–ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.545.21 கோடி ஒதுக்கீடு அமைச்சர் சரோஜா தகவல்
x
தினத்தந்தி 29 Dec 2018 4:00 AM IST (Updated: 28 Dec 2018 7:32 PM IST)
t-max-icont-min-icon

2018–19–ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 545.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.

அரூர்,

தர்மபுரி மாவட்டம், அரூர் (தனி) தொகுதிக்குட்பட்ட வேப்பம்பட்டி, ஈட்டியம்பட்டி, புறாக்கல் உட்டை, அச்சல்வாடி உள்ளிட்ட இடங்களில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து, ஆலோசனை நடத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் சரோஜா நிருபர்களிடம் கூறுகையில், நடப்பாண்டு, சத்துணவு திட்டத்திற்கு ரூ.1,917 கோடியும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்திற்கு, ரூ.2,525 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு, ரூ.140 கோடியும், தாலிக்கு தங்கம், ரூ.724 கோடியும் என மொத்தம் ரூ.5,611 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக, தேசிய குற்றவியல் ஆவண காப்பகம், தமிழ்நாட்டிற்கு விருது வழங்கி உள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு, 567 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில், 2018–19–ம் ஆண்டு மட்டும், ரூ.545.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கஜா புயலால் சேதமடைந்த மின்கம்பங்களை, புயல் வந்த வேகத்தை விட, வேகமாக செயல்பட்டு, மின்வாரிய பணியாளர்கள் சீரமைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story