தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்
கிராம நிர்வாக அலுவலகங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கணினிவழி சான்றுகள் வழங்குவதற்கு நவீன கணினிகள், இணையதள இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கடந்த 10–ந்தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் நேற்று 19–வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க வட்டார தலைவர் அமர்ராஜ், செயலாளர்கள் மந்திரசூடாமணி, சுப்பையா மற்றும் கோவில்பட்டி, கயத்தாறு தாலுகாக்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட துணை செயலாளர் செல்வலிங்கம், வட்டார தலைவர் வைரமுத்து, செயலாளர் சரவணகுமார், துணை செயலாளர் கனகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டார தலைவர் பாலமுருகன், செயலாளர் கணேசன், பொருளாளர் சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story