காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.1.65 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடம் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.1.65 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடம் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 29 Dec 2018 4:45 AM IST (Updated: 28 Dec 2018 9:47 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.1.65 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திட்டத்தின் கீழ் ரூ.1.65 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் தரைத்தளத்தில் 4 வகுப்பறைகளும், முதல் தளத்தில் 4 வகுப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன. கட்டிடத்தின் 2-வது தளத்தில் 2 வகுப்பறைகளும், 3-வது தளம் 32.99 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

இங்கு கல்லூரி மாணவிகளின் பயன்பாட்டிற்காக மொத்தம் 10 புதிய வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த புதிய வகுப்பறை கட்டிடத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இதையொட்டி காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லா கான், உதவி கலெக்டர் சிவனருள் ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் சகுந்தலா, முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் மாணிக்கம், கல்லூரி முதல்வர் சந்திரன், பொதுப்பணித்துறை (தொழில்நுட்ப கல்வி) உதவி பொறியாளர் இளங்கோ, தாசில்தார் கேசவமூர்த்தி, கூட்டுறவு சங்கத்தலைவர் செல்வராஜ், கல்லூரி பேராசிரியர்கள், அரசுத்துறை அலுவலர்கள், மாணவிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story