கள்ளத்தொடர்பை கண்டித்ததால் தறித்தொழிலாளியை கொன்றேன் மனைவியின் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்


கள்ளத்தொடர்பை கண்டித்ததால் தறித்தொழிலாளியை கொன்றேன் மனைவியின் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 29 Dec 2018 3:30 AM IST (Updated: 28 Dec 2018 10:33 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலை கண்டித்ததால் தறித்தொழிலாளியை கழுத்தை அறுத்து கொன்றேன் என்று மனைவியின் கள்ளக் காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ராயக்கோட்டை,

கெலமங்கலம் அருகே உள்ள தொட்டபேளூரை சேர்ந்த மாதேஷ் (வயது 35) என்ற தறித்தொழிலாளி கடந்த 26-ந் தேதி இரவு கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இந்த கொலை தொடர்பாக கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அதில் மாதேசை அவரது மனைவி அம்பிகா, அவரது கள்ளக்காதலன் ராமமூர்த்தி, ராமமூர்த்தியின் நண்பர் முரளி (24) ஆகிய 3 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

கைதான ராமமூர்த்தி போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:-


நானும், மாதேசும் உறவினர்கள் ஆவோம். மாதேசின் மனைவி அம்பிகாவிற்கும், எனக்கும் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை மாதேஷ் கண்டித்தார். இதனால் மாதேஷ் உயிருடன் இருக்கும் வரை நம்மால் உல்லாசமாக இருக்க முடியாது. எனவே அவரை கொலை செய்து விடுமாறு அம்பிகா கூறினார்.

இதையடுத்து நான் எனது நண்பர் முரளியுடன் மாதேசின் வீட்டிற்கு சென்று அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தேன். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து கைதான அம்பிகா, அவரது கள்ளக்காதலன் ராமமூர்த்தி, நண்பர் முரளி ஆகிய 3 பேரையும் தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story